திம்பம் கொண்டை ஊசி வளைவில் தக்காளி லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் கொண்டை ஊசி வளைவில் தக்காளி லாரி கவிழ்ந்து விபத்து
திம்பம் கொண்டை ஊசி வளைவில் தக்காளி லாரி கவிழ்ந்து விபத்து ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சேலத்துக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு பொலிரோ பிக் அப் வேண் சென்றது. வேணை சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வேண் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டாவது கொண்ட ஊசி வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story