விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு!
Thoothukudi King 24x7 |29 Dec 2024 8:58 AM GMT
தூத்துக்குடியில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மினி டைட்டில் பார்கை திறந்து வைப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அவருக்கு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடியில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மினி டைட்டில் பார்கை திறந்து வைப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அவருக்கு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து விமானத்தில் வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே என் நேரு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், டிஆர்பி ராஜா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், ஏடிஜிபி ஜெயராமன், டிஐஜி மூர்த்தி எஸ்பி ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி நகர உதவி கண்காணிப்பாளர் மதன், மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், ராஜா, நெல்லை அப்துல் வகாப், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜோயல், திமுக கட்சியினர் விமான நிலையத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது விமான நிலையத்திலிருந்து நின்று கொண்டிருந்த கட்சி தொண்டர்களிடம் நடந்து சென்று சால்வை மற்றும் பூ கொத்து வாங்கி சென்றார். அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் பின்னர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள சத்யா ரிசார்ட் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்க சென்றார். பின்னர் மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சுமார் 32 கோடியை 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட மினி டைட்டில் பார்க்கை திறந்து வைத்து மினி டைட்டில் பார்க்கை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 5:50 மணி அளவில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெறும் வடக்கு தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இது தொடர்ந்து (road show) கலந்துகொண்டு திருச்செந்தூர் சாலை மற்றும் பாளையங்கோட்டை சாலையில் இரு புறங்களும் நிற்கும் பொதுமக்களே சந்திக்க உள்ளார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு சத்யா ரிசாட்டில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து 30ஆம் தேதி காலை 9 மணி அளவில் சத்யா ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் பெற உள்ளனர் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ,மற்றும் திமுகவினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலைகளில் இரு புறங்களிலும் இரு வண்ணக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு 30ஆம் தேதி 12 மணிக்கு மேல் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.
Next Story