உஞ்சுனி கிராமத்தில் கைநெசவு தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி அண்ணாதுரை மறைவு.

உஞ்சுனி கிராமத்தில் கைநெசவு தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி அண்ணாதுரை மறைவு.
செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தில் கை நெசவு தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி அண்ணாதுரை மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரியலூர், டிச.29- ஒன்றுப்பட்ட திருச்சி மாவட்டத்தில் 1985 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளையானது செந்துறை வட்டம் உஞ்ஞினி கிராமத்தில உருவாக்கப்பட்ட போது உறுப்பினாராக சேர்க்கப்பட்டு கட்சியின் கிளை செயலாரகவும், பெரம்பலூர் அரியலூர் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும்,  தற்போது கைநெசவு தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகியாக செயல்பட்ட வி. அண்ணாதுரை சனிக்கிழமை நள்ளிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர் மணிவேல், எம்.வெங்கடாசலம், ஏ கந்தசாமி, துரை.அருணன், டிஅம்பிகா, செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுனன், அரியலூர் ஒன்றிய செயலாளர் அ.அருண்பாண்டியன், மாவட்ட தலைவர் பி பத்மாவதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் அழகுதுரை, கை நெசவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.என்.துரைராஜ் மற்றும் செந்துறை வட்ட குழுஉறுப்பினர்கள் இ.பன்னீர்செல்வம், க.அறிவழகன், ஜி.செண்பகவள்ளி, கருப்பையா, ராஜேஸ்வரி மற்றும் கட்சி உறுப்பினர்கள், கைநெசவு தொழிலாளர் சங்க நிர்வாகிகள்  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
Next Story