தடுப்பணையில் குளித்த இரு சிறுவர்கள் காப்பாற்ற முயன்ற மூதாட்டி உயிரிழப்பு
Kanchipuram King 24x7 |29 Dec 2024 9:42 AM GMT
உத்திரமேரூர் வெங்கடசேரி பாலாற்றில் தடுப்பணைகள் குளிக்கச் சென்ற மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி பாலாற்றில், கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணையை தாண்டி வெள்ளநீர் சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில், கடம்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி பத்மா, 55. இவர், சென்னையில் இருந்து வந்த பேரன் தீபக், 15, பேத்தி வினிசியா, 9, மருமகன் வினோத்குமார் ஆகியோருடன், அருகிலுள்ள வெங்கச்சேரி பாலாற்று தடுப்பணைக்கு, குளிக்க சென்றார். அப்போது, வினிசியா, தீபக் ஆகிய இருவரும், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். இதை கண்ட பத்மா, வினோத்குமார் கூச்சலிட்டவாறு நீரில் குதித்தனர். இதில், பத்மா நீரில் மூழ்கி பலியானார். தொடர்ந்து, நீரில் தத்தளித்த வினோத்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டனர். இதுகுறித்து உத்திரமேரூர் தீயணைப்பு போலீசார் மற்றும் மாகரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, காணாமல் போன இரு சிறுவர்களை தீயணைப்பு படை வீரர்கள், ஒரு மணி நேரமாக தேடினர்.பின், பத்மா, தீபக் மற்றும் வினிசியா ஆகியோரின் உடலை மீட்டனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு மூன்று பேரின் உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டது. மாகரல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story