பிரசவித்து இறந்து போன சங்கீதாவிற்கு நீதி கேட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட முயற்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்,பொதுமக்கள்

பிரசவித்து இறந்து போன சங்கீதாவிற்கு நீதி கேட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட முயற்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்,பொதுமக்கள்
X
பிரசவித்து இறந்து போன சங்கீதாவிற்கு நீதி கேட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட முயற்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர், டிச.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் பெண் இறந்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான அரசு மருத்துவரை கைது செய்ய வேண்டும் , இறந்து போன சங்கீதாவின் கணவருக்கு அரசு வேலையும், ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும், மேலும் சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்து உண்மை தன்மையை அறியும் வகையில் வீடியோ காட்சி பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா, கடலூர் மாவட்ட குழு உறுப்பினர் தினேஷ்பாபு, திருமுட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் வெற்றிவீரன், முருகன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஈச்சம்பூண்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் உறவினர்கள் என 100 -க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் கூறும்போது :- இறந்து போன பெண்ணின் கணவருக்கு அரசு வேலையும் 25  லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், முறையாக பிரேத பரிசோதனை செய்து வீடியோ காட்சி பதிவு செய்ய வேண்டும் எனவும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில்  மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என இவ்வாறு தெரிவித்தார். சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story