ராமநாதபுரம் - பாஜக உக்கட்சி தேர்தலில் மோதல்

ராமநாதபுரம் - பாஜக உக்கட்சி தேர்தலில் மோதல்

பாஜக உட்கட்சித் தேர்தலில் மோதல்

இராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் வெடித்த மோதலால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பாஜக உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இன்று முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் பாஜக தலைவருக்கான தேர்தல் மருதகம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் ஒன்றிய தேர்தல் அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தனது ஆதரவாளரான மோகன்தாஸ்க்கு முன்மொழிந்து 20 கிளை தலைவர்களிடம் வருகைப் பதிவேடுக்கு என்று கையொப்பம் பெற்றுக்கொண்டு அறிவித்துள்ளனர். இதில் கோபமடைந்த கிளை தலைவர்கள் தங்களிடம் ஏமாற்றி கையொப்பம் பெற்றதாக கூறி தேர்தல் ஒப்புதல் படிவத்தை கிளித்தெரிந்தனர்.

மேலும் தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ்பாபுவிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒன்றிய தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், ரத்து செய்யப்பட்ட ஒன்றிய தேர்தலை மாநில தலைமை முறையாக நடத்திட வேண்டும் என கிளை தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story