பள்ளி மாணவர்களுக்கான ஓவிய பயிற்சி முகாமின் நிறைவு விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

பள்ளி மாணவர்களுக்கான ஓவிய பயிற்சி முகாமின் நிறைவு விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது
X
எஸ்.எப்.எஸ் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவிய பயிற்சி முகாமின் நிறைவு விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் எஸ்.எப்.எஸ் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவிய பயிற்சி முகாமின் நிறைவு விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு உண்டு உறைவிட ஓவிய பயிற்சி முகாம் 26.12.2024 முதல் 29.12.2024 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்றது. ஓவியப் பயிற்சியில் மாணவர்களுக்கு “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்ற மையக்கருத்தின் கீழ் ஓவியப் பயிற்சி வல்லுநர்களால் அளிக்கப்பட்டது. பயிற்சியில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளில் இருந்து 35 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவிய பயிற்சியின் மூன்றாம் நாள் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ள சிற்பங்களை மாணவர்கள் நேரடியாக பார்த்து வரையும் பயிற்சியை பெற்றனர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கினார்.
Next Story