கூட்டுறவு கடன் கிடைப்பதில் தாமதம் - இராமநாதபுரம் விவசாயிகள் கவலை

வைகை பாசன விவசாய சங்கத் தலைவர் பாக்கியநாதன்

இராமநாதபுரம் விவசாயிகள் அதிருப்தி
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விவசாய கடன் வழங்காததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பல லட்சம் ஏக்கர் விவசாயம் செய்துள்ளனர். இதில் நெல் மிளகாய் பருத்தி உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் ஆகியோரின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயம் செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கி வருகின்றனர்.
இதில் வாலாந்தரவை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்குவதற்கு அறிவுறுத்தல் செய்து விவசாயிகள் அதற்கான சான்றிதழ்களை வாலாந்தரவை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கிவிட்டு கடன் பெறுவதற்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை கடன் வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் முழுமையான விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் கடும் அதிப்தியில் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தினுடைய காலதாமதமா அல்லது வேற எதுவும் காரணம் உள்ளதா? கடன் வழங்குவதில் யாருக்கு பொறுப்பு? விவசாயிகளை பலமுறை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வரவழைத்து அழைக்களிப்பு செய்வது விவசாயிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது. மாவட்டத்தில் ஒரு சில கடன் சங்கத்தில் இதுபோன்று செய்வதால் ஒட்டுமொத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.
உடனடியாக மாவட்ட கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விரைவில் கடன் வழங்காத கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் முன்பு விவசாயிகளை திரட்டி கடுமையான போராட்டம் செய்ய உள்ளதாக வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.


