நான் தான் அடுத்த முதல்வர் என்கிறார் என விஜயையும், அப்பாவும் மகனும் அடித்துக் கொள்கிறார்கள் என பாமகவையும்,பாஜக தலைவர் செருப்பால் அடித்துக்கொள்வாரா? எம்எல்ஏ தாக்கு.

நான் தான் அடுத்த முதல்வர் என்கிறார் என விஜயையும், அப்பாவும் மகனும் அடித்துக் கொள்கிறார்கள் என பாமகவையும்,பாஜக தலைவர் செருப்பால் அடித்துக்கொள்வாரா? எம்எல்ஏ தாக்கு.
X
நான் தான் அடுத்த முதல்வர் என்கிறார் என விஜயையும், அப்பாவும் மகனும் அடித்துக் கொள்கிறார்கள் என பாமகவையும்,பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொள்வாரா? ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தாக்கி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர், டிச.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நகர திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட பிரதிநிதியும் வார்டு கவுன்சிலருமான இராஜமாணிக்கம் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள், தலைமை கழக இளம் பேச்சாளர், திமுக சட்ட திட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர்,  திமுக தலைமை  ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி  மேற்பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தங்க.இராமகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர்,  மற்றும்  திமுகவின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு திமுக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து பேசினார். அப்பொழுது நான் உள்ளிட்ட திமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவும் திமுக ஆட்சியில் இருப்பதற்கும் ஒரே காரணம் உதயநிதி தான் ஒற்றை செங்கலை வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். வாரிசு அரசியல் என்கிறார்கள் மன்னராட்சி என்கிறார்கள் நானும் வாரிசுதான். மன்னராட்சி போல யாரும் பட்டம் சூட்டிக்கொண்டு வரவில்லை அப்படியா வந்தோம் நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததால் தான் நாங்கள் எம்எல்ஏவாக உள்ளோம் அதே போல் தான் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தான் தற்போது துணை முதலமைச்சராக உள்ளார். மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் ஆனால் வயிற்று எரிச்சல் காரணமாக மன்னர் ஆட்சி என பிதற்றிக் கொண்டு உள்ளார்கள். புதுசா வந்துள்ள விஜய் வீட்டில் இருந்து கொண்டே அரசியல் செய்கிறார். ராத்திரி பகல் என்று பாராமல் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சரையே குறை சொல்கிறார்கள் ஆனால் இவர் வீட்டில் இருந்து கொண்டே கட்சி நடத்துகிறார். அடுத்து நான் தான் முதல்வர் என்கிறார். எல்லாம் எம்ஜிஆராக முடியுமா. திமுக ஆரம்பித்து 70 வருடம் ஆகிறது ஒரு காலத்திலும் ஒரு கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது திமுக என்றுமே உங்களை கைவிடாது மக்களுக்கான இயக்கம் அதை திமுக செய்து கொண்டுள்ளது தேர்தலின் போது முதலமைச்சர் சொன்னதை எல்லாம் செய்து வருகிறார் எனக் கூறிய எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் திமுக ஆட்சியில் செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறிப்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் கொண்டுவரப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டை ராஜேந்திர சோழனுக்கான அருங்காட்சியகம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஜெயங்கொண்டம் முதல் விருத்தாசலம் வரையிலான நான்கு வழி சாலை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக திட்டங்களை பட்டியலிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என முதலமைச்சர் உங்களை நம்பி சொல்லி உள்ளார். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் பாமக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு என மக்களை ஏமாற்றி வருகிறது. அதற்கு நமது அமைச்சர் சிவசங்கரும் பதில் அளித்துள்ளார். வன்னிய இன மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் கலைஞர்  20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார். பாமகவில் மகனும் அப்பாவும் மேடையிலேயே அடித்துக் கொள்கிறார்கள் அது இப்ப ஒரு சமுதாய மக்களுக்கான கட்சியாக இல்லாமல் குடும்ப கட்சியாக மாறி உள்ளது. பாமகவை யாரும் நம்பாதீர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை விட்டுவிட்டு தற்போது ஆடு மேய்த்து வரும் கோமாளியாக உள்ளார். திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என கூறியுள்ளதன் மூலம் அவர் சாகும் வரை செருப்பு போட முடியாது. 2026 இல் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும் அப்படி திமுக ஆட்சி வந்தால் அதே செருப்பை எடுத்து அண்ணாமலை அடிச்சுக்குவாரா? என கேள்வி எழுப்பினார்  எனவே 2026 -இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Next Story