பரமத்தி வேலூர் காவல்நிலைய வாசல் படியில் அமர்ந்து கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டம்.

X
Paramathi Velur King 24x7 |29 Dec 2024 8:43 PM ISTபரமத்தி வேலூர் காவல்நிலைய வாசல் படியில் அமர்ந்து கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
பரமத்தி வேலூர், டிச. 29: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைய குடிநீர் இரும்பு குழாய்கள், பழுதடைந்த பேட்டரி வாகனங்களின் உதிரிபாகங்களை இரும்பு வியாபாரி ஆறுமுகம் தலைமையில் 3 பேர் மினி சரக்கு லோடு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் இரும்பு குழாய்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து குழாய்களை யார் எடுக்க சொன்னது, (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் எவ்வாறு எடுக்கலாம் என கேட்ட போது பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்திரத்திடம் சொல்லி விட்டு தான் எடுக்கின்றோம் ரூ 2 இலட்சம் டெண்டர் எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர், இருப்பினும் அந்த 3 பேரையும் பிடித்து பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர் அப்போது உரிய முறையில் விசாரணை நடத்தி தான் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்கள் சுமார் 8 பேர் காவல் நிலைய வாசலில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில் ஏற்கனவே குடிநீர் குழாய் காணாமல் போனதாக செய்தியாளர், கவுன்சிலரின் கணவர் தலைவ் ர் லெட்சுமி முரளியிடம் கேட்ட போது அத்துமீறி நுழைந்து விட்டதாக தலைவர் லெட்சுமி முரளி கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் உடனடியாக வழக்குபதிவு செய்யப்பட்டன ஆனால் இன்று ஏன் வழக்குப் பதிவு செய்ய மறுக்கின்றனர் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவர் லெட்சுமி முரளி மீது அதிருப்தியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவுன்சிலர்கள் போராட்டம் குறித்து பரமத்தி வேலூர் டி.எஸ்.பி சங்கீதா அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். பரமத்தி வேலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் காவல்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Next Story
