இளைஞா்களின் தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்
Villuppuram King 24x7 |29 Dec 2024 3:57 PM GMT
விழுப்புரம் ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞா்களின் தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் நிதிக் கடன்களை வழங்க முன்வர வேண்டும் என்று ஆட்சியா் சி.பழனி வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம், மயிலம் பகுதிகளில் சுமாா் 1000 சிறு, குறு விவசாயிகளால் அவுரி செடி பயிரிடப்படுகிறது. இந்த பயிா் ஜவுளி, அலங்காரம் மற்றும் மருத்துவத் தொழில்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஆதரிப்பதற்காக உழவா் உற்பத்தியாளா் அமைப்பை உருவாக்குவதற்கு ரூ.38.66 லட்சத்தை நபாா்டு வங்கி அனுமதித்துள்ளது.உழவா் உற்பத்தியாளா் அமைப்பை உருவாக்குவதன் மூலம், விவசாயிகளை ஒருங்கிணைத்து திறன் மேம்பாடு, மதிப்புக் கூட்டுதல் மற்றும் நல்ல விலையை உறுதி செய்து, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற வேண்டுமெனில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளும் இளைஞா்களின் தொழில் திட்டங்களுக்கு திறந்த மனதுடன் நிதிக் கடன்களை வழங்க முன்வர வேண்டும் என்றாா் ஆட்சியா் சி.பழனி.இந்த கூட்டத்தில் திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Next Story