திண்டிவனம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த இரண்டு பேர் கைது

திண்டிவனம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த இரண்டு பேர் கைது
நூறு போதை மாத்திரைகள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம்,ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் திண்டிவனம் ஆஸ்பத்திரி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தனியார் கேஸ் குடோன் பகுதியில் சந்தேகிக்கும்படி நின்றிருந்த இரண்டு பேரை விசாரித்ததில் அவர்கள், ரோஷனை பாட்டை பகுதியை சேர்ந்த சுல்தான் (20), கிடங்கள் 2 பகுதியை சேர்ந்த அப்பு என்கின்ற ஆகாஷ் (23) என்பது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் 100 போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story