ஓசூர் : தடுப்பு சுவரில் மோதி ஒருவர் பலி.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (35) தையல் தொழிலாளியான. இவர் சம்பவ அன்று இவர் டூவீலரில் அப்துல் சமீர் (47) சல்மான் (24) ஆகியோருடன் சென்றார். அப்போது ஓசூர் தனியார் கண் ஆஸ்பத்திரி அருகே உள்ள சென்டர் மீடியனில் டூவீலர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரகுமான் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு அங்கு உயிரிழந்தார். சல்மான், அப்துல் சமீர் ஆகியோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.விபத்து குறித்து அட்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story