திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

X
திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து பாடிக் ஏர் விமானம் மூலம் வந்த பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் லக்கேஜில் கள்ளத்தனமாக 2447 உயிருள்ள ஆமை குஞ்சுகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

