திருப்பத்தூரில் புதுமை பெண் திட்ட விழா

திருப்பத்தூரில் புதுமை பெண் திட்ட விழா
X
திருப்பத்தூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் விழாவில் ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் விழாவில் ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு! முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் கீழ் மாதம் ரூ.1000/- பெறுவதற்கான வங்கி பற்று அட்டை மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் புதுமை பென் விரிவாக்க திட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று புதுமை பெண் விரிவாக்க திட்ட விழாவில் தமிழக அரசால் துவங்கப்பட்டு செயல்படுத்தி வருகிற புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகள் மேற்படிப்பு பயில்வதற்காகவும், மாணவிகள் பயன்படுத்தி கொள்ளவும் இத்திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 4.25 லட்சம் மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பத்தூர் தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் கலந்துக்கொண்டனர் புதுமைப்பெண் திட்டத்தில் நம் மாவட்டத்தில் இதுவரையில் 2710 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். தமிழக அரசால் மாணவிகள் எதிர்காலத்தை மனதில் வைத்து மாண்புமிகு முதல்வர் இந்த திட்டத்தை துவங்கி வைத்துள்ளார்கள். அதை மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் இந்த திட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்று மேல்படிப்பு படிக்க முடியாத மாணவிகளுக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக உள்ளது
Next Story