உடுமலையில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தவெகாவில் ஐக்கியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக வெற்றிக்கழகம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே சங்கர் தலைமையிலும் உடுமலை நகர தலைவர் ராமன் முன்னிலையில் நகர மகளிர் அணி தலைவி சரண்யா ஏற்பாட்டில் அதிமுக திமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் அப்போது திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி கே சங்கர் பேசும் பொழுது 60 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகள் தற்பொழுது தளபதி விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை பார்த்து அஞ்சும் நிலை உள்ளது எனவே வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பது உறுதி ஆகையால் மாற்றுக் கட்சிகளில் இருந்து இணைந்துள்ள அனைவரும் இப்போது இருந்து வெற்றிக்காக தங்களது பணிகளை துவக்க வேண்டும் என பேசினார் பின்னர் உடுமலையில் முதல் முறையாக பிரம்மாண்டமாக 70 அடி உயரத்தில் கொடியேற்றி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்வில் நகர செயலாளர் காஜா நகர பொருளாளர் பிரேம் துணைத் தலைவர் பிரபு நகர நிர்வாகி மோதி முகமது மற்றும் குடிமங்கலம் ஒன்றிய தலைவர் காந்தி கு குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ் குடிமங்கலம் ஒன்றிய விவசாயி அணி நிர்வாகி சபரீஷ் குமார் தேவனூர் புதூர் சத்யராஜ் மற்றும் தெற்கு பகுதி ஜெயபிரகாஷ் கொங்கலக்குறிச்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நகர மகளிர் அணி ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story






