திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூரில் குறை தீர்வு கூட்டத்தில் 8 மாற்று திறனாளிகளுக்கு 5 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால் ஆட்சியர் வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு 4 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள செயற்கை கால் ஆட்சியர் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் மாவட்ட ஆட்சியர் மனு மீது உடனடியாக துறைச் சார்ந்த அதிகாரியிடம் கொடுத்து உடனே மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார் அதன் பின்னர் 8 மாற்று திறனாளி நபர்களுக்கு4.லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை கால் ஆட்சியர் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை காவல் துறை வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர் இந்நிலையில் பவர் கொடுத்த நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மனு. கொடுத்தனர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அசோக் நகர் பகுதி சேர்ந்த தனம் குடும்பத்தினர் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு ஆறு ஏக்கர் 44 சென்ட் அளவிலான நிலத்தை சில வருடங்களுக்கு முன்பு ஆறு லட்சம் மதிப்பில் பவர் கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அதனை ‌ தனம் குடும்பத்தினருக்கு தெரியாமல் அந்த நிலத்தை ரவிச்சந்திரன் குமார் என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக நிலத்தை மீட்டு தரவும் மேலும் விற்பனை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனம் குடும்பத்தினர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர். பேட்டி _உதயசீலன் பாதிக்கப்பட்டவர்
Next Story