உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
X
உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம் உடுமலை வழித்தடத்தில் 50க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளது கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் திருப்பூர் பல்லடத்துக்கு செல்கின்றனர் இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ் வசதியும் குறைவாகவே உள்ளது அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திருப்பூர் பஸ்களையே பயணிக்க வேண்டி உள்ளது பல்லடம் உடுமலை ரோடு மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது ஆனால் போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை உடுமலையிலிருந்து பாயும் டூ பாயிண்ட் பஸ்கள் மட்டும் திருப்பூருக்கு இயக்கப்பட்டுள்ளது இந்த பஸ்கள் உடுமலை பஸ் நிலையம் குடிமங்கலம் ஜல்லிக்கட்டு பல்லடம் ஆகிய இடங்களில் மட்டும் நிறுத்தப்படுகிறது இதனால் பல்லடம் வழித்தட கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு போதிய பஸ் வசதி கிடைக்கவில்லை எனவே காலை மாலை நேரங்களில் பல்லடம் உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story