விஞ்ஞானிகளை போற்றுவோம் கருத்தரங்கம்

X
Komarapalayam King 24x7 |30 Dec 2024 7:10 PM ISTவிஞ்ஞானிகளை போற்றும் வகையில் விடியல் ஆரம்பம் சார்பாக கருத்தரங்கம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக விஞ்ஞானிகளை கொண்டாடுவோம் நிகழ்ச்சி ஆனது மிகச் சிறப்பான முறையிலே குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் அரங்கத்திலே கிளை நூலக வாசக வட்ட தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் மிகச் சிறப்பான முறையிலே கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்வையே முழுமையாக அர்ப்பணித்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கண்டறிந்து கொடுத்த நினைவு கூர்ந்து போற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கேசவ மூர்த்தி ராஜகோபாலன், மனநல சிகிச்சையாளர் சண்முகசுந்தரம், பஞ்சாலை சண்முகம், மோகன்,ராகு வாழ்க ரமேஷ், பன்னீர்செல்வம், ஜமுனா,ருத், குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Next Story
