ராசிபுரம் கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் பொருள் விற்பனை.அமைச்சர் எம்பி, ஆட்சியர்,உள்ளிட்டோர் துவக்கி வைப்பு...
Rasipuram King 24x7 |30 Dec 2024 2:42 PM GMT
ராசிபுரம் கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் பொருள் விற்பனை.அமைச்சர் எம்பி, ஆட்சியர்,உள்ளிட்டோர் துவக்கி வைப்பு...
நாமக்கல் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில், பொங்கல் பொருட்கள் விற்பனை தொடக்க விழாவானது,ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் விற்பனைச் சங்கத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, அவர்கள் தலைமை வகித்தார். பொங்கல் பொருள்கள் முதல் விற்பனையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.இதில் மஞ்சள், பச்சரிசி, முந்தரி, திராட்சை, பெரிய சைஸ் பை உள்ளிட்ட ரூ.199 மதிப்பிலான தொகுப்பில் 8 பொருள்களும்,ரூ. 499 மதிப்பிலான தொகுப்பில் 20 பொருள்களும், ரூ.999 மதிப்பிலான தொகுப்பில் 35 பொருட்களும் என 3 விலைகளில், 3 தொகுப்புகளாக விற்பனை செய்யப்படுகின்றன..
Next Story