பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மேல் ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் அன்பரசன்,31.இவர், நேற்று முன்தினம் இரவு, தனக்குச் சொந்தமான,'ஹோண்டா சைன்' இருசக்கர வாகனத்தில், பணிக்காக சென்னை நோக்கிச் சென்றுள்ளார்.அப்போது, இரவு நேரம் என்பதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், படாளம் காவல் எல்லைக்கு உட்பட்ட அத்திமனம் பேருந்து நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இரவு துாங்கியுள்ளார். அப்போது, மர்ம நபர்கள் இருவர், அன்பரசனை மிரட்டி விவோ ரக மொபைல்போன், 600 ரூபாய் பறித்துள்ளனர். அத்துடன், அங்கிருந்த மற்றொரு நபரை மிரட்டி, 2,000 ரூபாய் பறித்துள்ளனர். அந்த நேரத்தில் வந்த ரோந்து போலீசாரிடம் அன்பரசன் நடந்ததைக் கூற, அதில் ஒருவர் தப்பிக்க, மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். அவர், நெல்வாய் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், 41, என்பதும், தப்பி ஓடியது, நெல்வாய் பகுதியைச் சேர்ந்த அருள் என்பவரது மகன் விஜயபாரதி, 21, என தெரிந்துள்ளது. படாளம் காவல் நிலையத்தில் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின், மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான விஜயபாரதியை போலீசார் தேடி வருகின்றனர்..
Next Story