சத்தியமங்கலம் அருகே உள்ள கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா
Bhavanisagar King 24x7 |30 Dec 2024 2:55 PM GMT
சத்தியமங்கலம் அருகே உள்ள கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா
சத்தியமங்கலம் அருகே உள்ள கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா சத்தியமங்கலம் அருகே உள்ள கடைவீதியில் உள்ள ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை பகவத் அனுக்ஞை, விஸ்வக்சேனர், ஆராதனை, மஹா சங்கல்பம், வாசுதேவ புண்யாகவாசனம் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி, உற்சவர், மூலவர் விஷேச திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மஹா தீபாரதனை, சாற்றுமுறை தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியையும், தொடர்ந்து சுவாமிக்கு 1008 வடமாலை சாத்துதல் விழாவும், அடுத்து ஆஞ்சநேய சுவாமி வெள்ளிக்கவசம், தங்கவசம் அணிந்து மஹா அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோயிலுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story