லாலாபேட்டை பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.

லாலாபேட்டை பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.
லாலாபேட்டை பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மணவாசி பகுதியை சேர்ந்தவர் மலை சாமி வயது 45. இவர் டிசம்பர் 29ஆம் தேதி மதியம் 3:30 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூவீலர் லாலாபேட்டை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அதே சாலையில் கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் வயது 44 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மின்சார பேருந்து மலைசாமி ஓட்டிச் சென்ற டூ வீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் மலை சாமிக்கு பின்னந்தலை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மலைச்சாமியின் மகன் ராகுல் வயது 25 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மின்சார பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரமேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல் துறையினர்.
Next Story