ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வேலூர் காவேரி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வேலூர் காவேரி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு  வேலூர் காவேரி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர், டிச. 30:  பரமத்தி வேலூர் தாலுகா அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காவேரிக்கரை  கூட்டுக்காடு பகுதி அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 23 ஆம் ஆண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக திங்கட்கிழமை காலை 11 மணியளவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை காவிரி ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திராவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 1.45 மணியளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story