ராசிபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா..

ராசிபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்  கோவிலில் ஜெயந்தி விழா..
ராசிபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முன்னதாக காலை பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், குபேர ஹோமம், தன்வந்திரி ஹோமம், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகபூஜைகள் நடத்தப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஆஞ்சநேய பக்த ஜன சபா சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை சுவாமி திருவீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார். இதே போல் சேலம் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story