குளித்தலையில் கடிதம் நகல் வழங்கிய தவெக குளித்தலை ஒன்றிய நிர்வாகிகள்

குளித்தலை, பொய்யாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடிதம் நகல் வழங்கல்
பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றைய தினம் பெண்களுக்கு தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் இன்றைய தினம் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் மற்றும் மாவட்டச் செயலாளர் பாலு அறிவுறுத்தலின்படி தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக குளித்தலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கினர். இதனை தமிழக வெற்றிக் கழகம் குளித்தலையை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் சௌந்தர்யா, ரமணா ஆகியோர் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் கடிதம் நகலை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவம் மற்றும் குளித்தலை நிர்வாகிகள் விஜய், சிவா, காமராஜ், சரவணன், லெஸ்லி, ஆனந்த், மகேஷ்வரன், ஜீவபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு குளித்தலை பேருந்துநிலையத்தில் காத்திருந்த மாணவிகள் மற்றும் பெண்களிடம் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பான அரசு அமையனும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெண்கள் அனைவரும் விஜய் அண்ணாவிற்கு ஆதரவு தாருங்கள் பெண்களுக்கான பாதுகாவலனாக இருப்பார் இதை படித்து பாருங்கள் என கடிதம் நகலை வழங்கினர்.
Next Story