விருதுநகரில் புத்தாண்டு வானவேடிக்கை. மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.
Virudhunagar King 24x7 |30 Dec 2024 3:27 PM GMT
விருதுநகரில் புத்தாண்டு வானவேடிக்கை. மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.
விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும், பட்டாசு தொழிற்சாலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும், நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாகவும், எதிர்வரும் 31.12.2024 அன்று நள்ளிரவு 11.50 மணியளவில், விருதுநகர் வட்டம் மற்றும் நகரம், மதுரை ரோட்டில் அமைந்துள்ள கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாண வேடிக்கை நிகழ்வு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது. வாண வேடிக்கை நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படுவதால், இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Next Story