விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு நிலவியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு தொடர்ந்து தன்மீது வீண்பழி சுமத்தும் நோக்கில் போலீசார் வழக்குகளை பதிவு செய்வதாக கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு நிலவியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி பகுதியைச் சார்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தர்மர் (25).திருமணம் ஆகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வெம்பக்கோட்டை காவல்நிலையத்தில் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், காவல்துறையினர் இவரை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து அலைக்கழிப்பதாகவும் மேலும் பல வழக்குகளை இவர் மீது காவல்துறையினர் பதிவு செய்ய முயற்சிப்பதாகவும் இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தர்மர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தனது ஆட்டோவுடன் நுழைந்தார். ஆட்டோவை நிறுத்திய அவர் திடீரென்று ஆட்டோவில் அமர்ந்தவாறு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனைக் கண்ட அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரை சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story