தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் கைது கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Virudhunagar King 24x7 |30 Dec 2024 3:38 PM GMT
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் கைது கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ததை கண்டித்து கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இன்று ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்தார். மேலும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கைப்பட கடிதம் எழுதியிருந்தார். எழுதிய கடிதத்தினை அக்கட்சியினர் கல்லூரி மாணவிகள் பொது மக்களிடம் வழங்கிய போது காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க சென்ற கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story