புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கம் அமைச்சர் மாணவிகளுக்கு பற்று அட்டையை வழங்கினார்

புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கம் அமைச்சர் மாணவிகளுக்கு பற்று அட்டையை வழங்கினார்
புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கம் அமைச்சர் மாணவிகளுக்கு பற்று அட்டையை வழங்கினார்
அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் தேர்தல் நேரத்தில் பெண்களிடம்வாக்குகள் வாங்குவதில்மட்டும்குறியாக இருக்கிறார்கள்.நம்முடைய இயக்கத்தை பொருத்தவரை கட்சி அல்ல இயக்கம் திராவிட இயக்கம் இந்த இயக்கத்தை பொறுத்தவரையில்பெண்களெல்லாம் முன்னேற வேண்டும் பெண் சமுதாயம் விடுதலை பெற்று வெளியே வர வேண்டும் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் கை நிறைய சம்பாதிக்கவேண்டும்.அவர்களும் குழந்தைகளுக்கு கல்வியைசொல்லிக்கொடுக்கக்கூடிய தகுதி பெற வேண்டும். என நினைக்க கூடியவர் தமிழக முதலமைச்சர் என்றும் விருதுநகரில் வருவாய் மற்றும்பேரிடர்மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு ....
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, வங்கி பற்று அட்டைகள் வழங்கினார். இதேபோல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இத்திட்டத்தை துவங்கி வைத்து மாணவிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 5555 பேர் பயனாளிகள் ஆவர். தமிழ்நாட்டில் அதிக அளவிலான பயனாளிகள் விருதுநகர் மாவட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது "முதல்வர் பேசும் போது தகப்பன் ஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு செய்வதாக கூறினார். உங்களுக்கு பெரியப்பாவாக சித்தப்பாவாக இருந்து வீட்டு பெண் குழந்தைகள் எல்லாம் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1,000 நமக்காக கொடுத்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இதுவரை இல்லாமல் இருந்தது அதையும் வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் எப்பொழுதும் கல்வியில் சிறந்த மாவட்டம். அதை தக்க வைக்கிற அந்த முயற்சியில் நீங்களும் இருக்கிறீர்கள் நாங்களும் இருக்கிறோம். நம்முடைய முதல்வரும் இருக்கிறார்கள். பெண்களுக்கு நிறைய திட்டங்களை முதல்வர் செய்கிறார். வேறு அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் தேர்தல் நேரத்தில் பெண்களிடம் வாக்குகள் வாங்குவதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். நம்முடைய இயக்கத்தை பொருத்தவரை கட்சி அல்ல இயக்கம் திராவிட இயக்கம் இந்த இயக்கத்தை பொறுத்தவரையில் பெண்களெல்லாம் முன்னேற வேண்டும் பெண் சமுதாயம் விடுதலை பெற்ற வெளியே வர வேண்டும் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும். அவர்களும் குழந்தைகளுக்கு கல்வியை சொல்லிக் கொடுக்கக்கூடிய தகுதி பெற வேண்டும். குடும்பத்தில் வறுமை இல்லாத சூழ்நிலை உருவாக வேண்டும் என்பதற்காக நம்முடைய முதல்வர் ஒவ்வொரு காரியத்தையும் சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள். பணிபுரி பெண்களுக்காக தோழி விடுதி. மகளிர் சம்பாதிப்பதற்காக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சுய உதவிக் குழுக்களுக்கு கடனை கொண்டு வந்தார்கள். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நமது மாவட்டத்தில் மட்டும் 900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டால் வீட்டு பத்திரத்தை வாங்கிக் கொண்டு தருவர். ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு உதவிகளை பெண்களுக்கு முதல்வர் செய்து வருகிறார்.பெண்கள் உயர வேண்டும். கல்விஅறிவு பெற வேண்டும். சமுதாயத்தின் விடுதலை பெற்ற பெண்களாக இருக்க வேண்டும் முன்னேற வேண்டும். என்று பாரதியார் பாடினார். பெரியார் சொன்னார் ஆனால் அவர்கள் அரசு நிர்வாகத்தில் இல்லாததால் செய்ய முடியவில்லை. அவர் ஆரம்பித்த இயக்கமாக இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா, கலைஞர் , ஸ்டாலின் அவர் சொன்னதை பின்பற்றி இந்த காரியம் எல்லாம் செய்கிறார்கள் நல்ல முதலமைச்சர் உங்களுக்காக பாடுபடக்கூடிய முதலமைச்சர். முதலமைச்சர் அத்தனை பேரும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு விடியல் பயணம் கட்டணமில்லா பேருந்துள்ளது. தாய்மார்கள் கையில் பணம் இருந்தால் அது வீடு போய் சேரும் என்ற உயர்ந்த எண்ணத்தில் முதல்வர் செயல்பட்டு வருகிறார்.அவரோடு கரம் கோருங்கள் அவருக்கு உறுதுணையாக இருங்கள் இவ்வாறு அவர் பேசினார்.
Next Story