துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி

துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி
துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி
விழுப்புரத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை யொட்டி, தி.மு.க., தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி விழுப்புரம் சதா அகாடமி மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாள்கள் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து இரட்டையர் பிரிவில் 50 அணிகள் கலந்துகொண்டனர்.நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில், திண்டிவனத்தைச் சேர்ந்த கனிஷ், கோபி அணியினர் வெ ற்றி பெற்று முதலிடம் பெற்றனர். கண்டமங்கலத்தை சே ர்ந்த அரவிந்த், இனியன் அணி இரண்டாம் இடத்தையும், விழுப்புரத்தை சே ர்ந்த சாந்தனு, நித்தீஷ் அணி மூன்றாமிடத்தையும், விழுப்புரம் விஜய், ரமேஷ் அணி நான்காம் இடத்தையும் பிடித்தனர்.மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலர் கவுதமசிகாமணி வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை, பதக்கங்களை வழங்கி பாராட்டினார். முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3வது பரிசு ரூ.10 ஆயிரமும், 4வது பரிசு ரூ.5 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டிகளை வாலிபால் மணி, பாபு உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
Next Story