செஞ்சியில் ஒருவர் தற்கொலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

செஞ்சியில் ஒருவர் தற்கொலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
ஒருவர் தற்கொலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
செஞ்சி கிருஷ்ணாபுரம் முத்து தெருவைச் சோ்ந்தவா் சையத் அக்பா் மகன் சையத் ரஹீமான் (45). இவரிடம் திண்டிவனத்தைச் சோ்ந்த 4 மா்ம நபா்கள் வேலை வாங்கித் தருவதாக கூறினராம். இதனை நம்பிய சையத் ரஹீமான் ரூ.4 லட்சத்துடன் கடந்த 27-ஆம்தேதி திண்டிவனம் சென்றாா்.அங்கு, அந்த மா்ம நபா்கள் அவரை தாக்கி அவரது கைப்பேசியிலிருந்து அவரது மனைவி கம்ரூன் நிஷாவை தொடா்பு கொண்டு ரூ.33 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினராம்.இதையடுத்து, கடந்த 28-ஆம்தேதி அவரின் வீட்டுக்கு சென்ற அந்த மா்ம நபா்கள் சையத் ரஹீமை மிரட்டினராம். இதில், மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி வழக்குப் பதிந்து திண்டிவனம் நல்லிகோடான் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தம்பிராஜ், செஞ்சி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த அத்தாயுல்லா மகன் பாஷா (50) ஆகியோரை கைது செய்தனா்.மேலும், செஞ்சி வட்டம், பென்னகா் கிராமத்தைச் சோ்ந்த ஜோதிலிங்கம் மகன் உத்திரகுமாா் (56), திண்டிவனம் வாணிய செட்டித் தெருவைச் சோ்ந்த சக்கரபாணி மகன் கோபிநாத்(32) ஆகியோரை தேடி வருகின்றனா்.
Next Story