மகாபாரத இன்னிசை சொற்பொழிவு
Komarapalayam King 24x7 |30 Dec 2024 4:25 PM GMT
பார பாளையத்தில் தமிழ் சிந்தனை பேரவை சார்பில் மகாபாரத இசை சொற்பொழிவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் தனலட்சுமி மண்டபத்தில் மகாபாரதம் 18 நாட்கள் இன்னிசை சொற்பொழிவு நிகழ்ச்சியில் 15 ஆம் நாள் நிகழ்ச்சியாக தூது செல்லும் துளப மாயோன் என்ற தலைப்பில் இன்னிசை சொற்பொழிவு நடைபெற்றது. மார்கழி முதல் நாளிலிருந்து மார்கழி 18 ஆம் நாள் வரை மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ஆம் நாள் அரவான் களப்பலியும் போர் ஆரம்பமும், 17 ஆம் நாள் கொடைவள்ளல் கர்ணன், பதினெட்டாம் நாள் தர்மம் வென்று தர்மர் முடிசூட்டுதல் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு பச்சியண்ணன் தலைமை ஏற்க தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் ராகு வாழ்க ரமேஷ் குமார் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற்புரையும் வாழ்த்துறையும் வழங்க, புலவர் சுப்பிரமணியனார் சொற்பொழிவாற்ற ஈரோடு மிருதங்க வித்வான் லட்சுமணன் தாளம் இசைஅமைத்தார்
Next Story