தா.பழூரில் திராவிடகழகம் சார்பில்,வைக்கம் வெற்றி முழக்கம்,தமிழ்நாடு,கேரளா மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி பாராட்டு விழா,திராவிடமாடல் அரசின் வரலாற்று சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Ariyalur King 24x7 |30 Dec 2024 6:08 PM GMT
தா.பழூரில் திராவிடர் கழகம் சார்பில்,வைக்கம் வெற்றி முழக்கம்,தமிழ்நாடு,கேரளா மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி பாராட்டு விழா,திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர், டிச.30- ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் கடைவீதியில்,அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்,வைக்கம் வெற்றி முழக்கம்,தமிழ்நாடு,கேரளா மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி பாராட்டு விழா,திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம்,தி.க ஒன்றிய தலைவர் இரா.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தி.க ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.க தலைமை கழக பேச்சாளர் வழக்கறிஞர் சிங்காரவேலன், ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் தி.க நிர்வாகிகள் தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேககம் தி.மு.க பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை,அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ்,பொருளாளர் த.நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை தலைவர் எழிலரசி அர்ச்சுனன்,தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் திக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் நன்றி கூறினார்.
Next Story