ஆரணி நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை இன்று முதல் செயல்படுத்தப்படும். ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்.

ஆரணி நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை இன்று முதல் செயல்படுத்தப்படும்.  ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்.
X
ஆரணி நகராட்சியில் சீர்செய்யப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்கிழமை முதல் செயல்படுத்தப்படும் என்று நடைபெற்ற ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆரணி நகராட்சியில் சீர்செய்யப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்கிழமை முதல் செயல்படுத்தப்படும் என்று திங்கள்கிழமை நடைபெற்ற ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். ஆரணி நகர மன்ற கூட்டம் திங்கள்கிழமை நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் (பொறுப்பு) பழனி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆரணி நகராட்சியில் பழுதடைந்த நவீன எரிவாயு தகன மேடையை சீர்செய்யப்பட்டு செவ்வாய்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தலைமைச் சான்று வழங்கிட ரூபாய் 69 ஆயிரத்து 300 செலுத்தி அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் ஒரு சடலத்திற்கு எரியூட்டும் கட்டணமாக லாப நோக்கம் இன்றி பராமரிப்பு தொகை மட்டும் பெற்றுக்கொண்டு தனியார் அறக்கட்டளை மூலம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய கமண்டல நாகநதி, தச்சூர் செய்யாறு, ஆர்க்காடு காவேரி கூட்டுக்குடிநீர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தண்ணீர் வரப்பெற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மூன்று இடங்களில் இருந்து நீரேற்றும் நிலையம் 45 கி.மீ தூரத்தில் இருந்து வரும் பிரதான பம்பிங் மெயின் குழாய், பைப்லைன் ஆகியவை அழுத்தத்தின் காரணமாக உடைப்பு ஏற்படுகிறது. ஆகையால் அதிக உறுதி கொண்ட பைப்லைன் அமைக்கவும், நீர் இறைவை நிலையங்களில் அதிக திறன் கொண்ட மோட்டார் பொருத்தவும் ரூ.9.50 லட்சம் ஒதுக்கீடு செய்தும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். இக்கூட்டத்தில் கவுன்சிலர் சுப்பிரமணி பேசியது, டிச 29 அன்று ஆரணி கோட்டை மைதானத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதில் தனியார் கடைகள் காட்சி படுத்தப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் சுமார் 15 கடைகள் வைக்கப்ப்டடிருந்தது. ஒவ்வொரு கடைக்கும் ரூ.3000 வசூல் செய்துள்ளனர். இந்த பணம் யாருக்கு வழங்கப்பட்டது என்று கேட்டார். இதற்கு ஆரணி நகரமன்ற தலைவர் கூறியது, ஆரணி கோட்டை மைதானம் திருவண்ணாமலை விளையாட்டுத்துறைக்கு சொந்தமானது. அவர்களிடம் அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். நகராட்சிக்கு சம்பந்தமில்லை என்று கூறினார். நகரமன்ற உறுப்பினர் அரவிந்தன் பேசியது, 23 வது வார்டில் உள்ள சத்துணவு கூடத்தின் மேற்கூரை சேதமடைந்தது குறித்து பலமுறை கூறியும் சீர்செய்ய வில்லை. ஏன் மெத்தனமாக உள்ளீர்கள் என்று கேட்டார். இதற்கு ஆணையாளர் விரைவில் சரிசெய்யப்படும் என்று கூறினார். மேலும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாபு, ஜெயவேல் உள்ளிட்டோர் அவரவர் பகுதி குறைகளை கேட்டனர். பின்னர் அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story