திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனை துவக்கம்

X
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 50 ஆம் ஆண்டு பருத்தி ஏல விற்பனை துவக்கு விழா நடைபெற்றது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி பகுதியில் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 50 ஆம் ஆண்டு பருத்தி ஏல விற்பனை துவக்க விழா கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பருத்தி விவசாயிகள் பருத்தி முட்டைகளை கொண்டு வந்து கூட்டுறவு விற்பனை நிலையத்தில் ஏலம் விடுவது வழக்கம். பருத்தியை வாங்கி செல்வதற்கு தமிழ் நாடு மற்றும் ஆந்திரா கர்நாடக கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் இருந்தும் கோயம்பத்தூர்,ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வதுண்டு இந்நிலையில் இன்று விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டுவது ஏலத்திற்கு வைத்துள்ளனர் இந்த வருடம் மழையின் காரணமாக மிகவும் விளைச்சல் குறைந்துள்ளது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இந்த பருத்தி ஏலம் விற்பனை விடும் நிகழ்வில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தேவராஜன், துணைத்தலைவர் சாமிக்கண்ணு, செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

