திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்...

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்...
X
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்...
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்... 500 முதல் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை ஏலம் போன இருசக்கர வாகனங்கள்.. எல்லா ப்ராப்பரா இருக்கனும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட எஸ்.பி ஸ்ரேயா குப்தா. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 2023-24 ஆண்டில் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் மற்றும் மதுவிலக்கு பிரிவால் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், கள்ளச்சாராயம், எரி சாராயம் கடத்திவரப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டதை உடைக்கும் தருவாயில் உள்ள வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்படி இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 243 வாகனங்களை ஏலத்திற்காக கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் 100 ரூபாய் அனுமதிச் சீட்டு வாங்கி ஆர்வத்துடன் ஏலத்தில் கலந்து கொண்டனர். மேலும் 1000 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது இதில் 500 முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை இருசக்கர வாகனங்கள் ஏலம் போனது மேலும் கார், ஆட்டோ உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது. மேலும் தர்மபுரியை சேர்ந்த சரவணன் என்பவர் 50 டோக்கனங்களைப் பெற்றுக் ஏலம் முடிந்த பிறகு வந்ததால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பி சென்றார். மேலும் ஒரு இருசக்கர வாகனம் உதிர் பாகங்களாக தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியது. ஏலத்தில் வாகன உரிமையாளர்களும் வாகனங்களை எடுப்பதற்காக வந்திருந்தனர். அப்பொழுது பொது ஏலம் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இருந்தபோதிலும் பெண் ஒருவர் இந்த இரு சக்கர வாகனம் வேண்டும் என கண்ணீர் விட்டு அழுது கொண்டே நின்ற காட்சிகளையும் பார்க்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஏலம் விடப்பட்ட இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது அவர் எல்லாம் ப்ராப்பரா இருக்கணும் எல்லாமே கரெக்டா செய்யணும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார். மேலும் அதிக விலைக்கு ஏலத்தைக் கேட்டு எடுத்தவர்கள் மீண்டும் பணம் கட்டி வாகனத்தை எடுத்துச் செல்லாமல் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சௌந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், நந்தினி தேவி மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Next Story