ஆஞ்சநேயருக்கு வட மாலை அணிவித்து அனுமன் ஜெயந்தி விழா
பொன்னேரி தடப்பெரும்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவிலில் 15 அடி உயர ஆஞ்சநேயருக்கு வட மாலை அணிவித்து அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தடபெரும்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது 15 அடி உயர அனுமன் சுவாமி சிலைக்கு 2008 வடமாலை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து அணிவித்து வழிபாடு நடத்தினர் முன்னதாக துளசி பக்தர்களின் கோரிக்கை அடங்கிய மாலைகள் சாத்தப்பட்டு பின்னர் வழிபாடு நடத்தப்பட்டது பின்னர் பக்தர்களுக்கு வட மாலை பிரசாதம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர்
Next Story





