குமரி : மேல்புறம் ஒன்றிய பாரதிய ஜனதா கூட்டம்
Nagercoil King 24x7 |31 Dec 2024 4:01 AM GMT
களியக்காவிளை
குமரி மாவட்டம் மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ. க கூட்டம் மேல்புறம் அருகே தோாட்டத்துமடம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் மேல்புறம் தெற்கு ஒன்றிய முன்னாள் தலைவர் சேகர் தலைமை வகித்தார். குமரி மாவட்ட தேர்தல் அதிகாரி பால்ராஜ், குமரி பா.ரமேஷ், மாநில செயலாளர் மீனா தேவ், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொதுச் செயாடினர் சுரேஷ், உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவராக சரவணவாஸ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டு தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நந்தினி, இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி, களியக்காவிளை பேரூராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், கட்சியின் கிளை தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story