விழுப்புரத்தில் கோவில் நில ஏலத்தின்போது தகராறு ஒருவர் மீது வழக்கு
Villuppuram King 24x7 |31 Dec 2024 4:14 AM GMT
கோவில் நில ஏலத்தின் போது தகராறு
விழுப்புரம் அருகே மிட்டாமண்டகப்பட்டு மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் கடந்த 26ம் தேதி ஏலம் விட்டுள்ளனர்.அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வேலு என்பவர் வந்து, ஏலம் விடாமல் நிலத்தை குத்தகைக்கு வழங்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், செயல் அலுவலர் ராமலிங்கத்தை மிரட்டியதோடு, அங்கிருந்த நாற்காலியை வேலு உடைத்துள்ளார்.இது குறித்து, ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வேலு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story