ராணிப்பேட்டையில் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர்!

புதுமைப்பெண் திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும், புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. அமைச்சர் காந்தி பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story