துடியலூர்: ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம் !
Coimbatore King 24x7 |31 Dec 2024 4:23 AM GMT
கோவை துடியலூர் மற்றும் தொப்பம்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் பிரமாண்ட அலங்காரங்களுடன் ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் ஹனுமன் ஜெயந்தி விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை துடியலூர் மற்றும் தொப்பம்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் பிரமாண்ட அலங்காரங்களுடன் விழா கொண்டாடப்பட்டது.துடியலூர் குபேர ஆஞ்சநேயர் கோவிலில், சஞ்சீவி மலையைப் போன்ற அமைப்பில் அருவிகளுடன் கூடிய பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களும் இடம்பெற்றுள்ளன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த சிலை பக்தர்களை மிகவும் கவர்ந்தது.தொப்பம்பட்டியில் உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் மகாராஜ மாருதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர்.இரு கோவில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ஆஞ்சநேயரை தரிசித்தனர்.
Next Story