மலைக்கோட்டாலம் கிராம மக்கள் மனு
Kallakurichi King 24x7 |31 Dec 2024 4:39 AM GMT
மலைக்கோட்டாலம்
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மலைக்கோட்டாலத்தில் கடந்த சில வருடத்திற்கு முன் டாஸ்மாக் கடை இயங்கியது. இதனால் கூலித்தொழிலாளிகள் பலர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்தினர்.மது அருந்துபவர்கள் கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள், இறைச்சி கழிவுகளை ஆங்காங்கே துாக்கி எறிந்து சென்றனர். பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு, டாஸ்மாக் கடை மூடப்பட்டது. தற்போது மீண்டும் மலைக்கோட்டாலத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி மலைக்கோட்டாலத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story