சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்
X
சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆசிஷ்ராவத் நியமிக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக 2024 பிப்ரவரி முதல் டோங்கரே பிரவீன் உமேஷ் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தமிழக அரசு சமீபத்தில் பல்வேறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பதவி உயர்வு இடம் மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டோங்கரே பிரவீன் உமேஷ் சென்னை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆசிஷ்ராவத், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
Next Story