வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

நல்லம்பள்ளி செவ்வாய் வார சந்தையில் 55 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது. இன்று டிசம்பர் 31 காலை கூடிய சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் & வியாபாரிகள் விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். நாளை ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது ஆடுகள் ரகம் & அளவை பொறுத்து 3000 ரூபாய்க்கு துவங்கி 22000 ரூபாய் வரையில் என 55 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story