தாயை இழந்த குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு புலிகள் காப்பாத்துக்கு கொண்டுவரப்பட்டது .....
தாயை இழந்த குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு புலிகள் காப்பாத்துக்கு கொண்டுவரப்பட்டது ..... கோவை மாவட்டம் அருகே வரபாளையத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது இதனால் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை தாயை இழந்து தவித்து வந்தது இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு மற்ற யானைகள் கூட்டத்துடன் சேர்க்க முயன்றனர் ஆனால் குட்டியை காட்டு யானைகள் சேர்த்துக் கொள்ள வில்லை. இருப்பினும் வனத்துறையினர் நேற்று (30.12.24) வரை முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பலன் ஏற்பட வில்லை. இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் கோவையில் இருந்து குட்டியானையை வனத்துறையினர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று கொண்டு சென்றனர். அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு தெப்பக்காடு முகாமுக்கு குட்டி யானை அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் குழுவினர் குட்டி யானைக்கு திரவ உணவு அளித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, குட்டி யானை நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து அதை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
Next Story




