தியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்.

மதுரை திருமங்கலத்தில் இன்று சுதந்திர போராட்ட தியாகியின் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் நினைவு நாளான இன்று (31.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்கள் திருமங்கலத்தில் அமைந்துள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் அவர்கள், வட்டாட்சியர் மனேக்ஸ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story