மின்சாரத் திருட்டில் ஈடுபடும் இறால் பண்ணையாளர்கள் மீது
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் உள்ள மாவட்ட இறால் விவசாயிகள் சங்கம் சார்பில், சங்க அலுவலகத்தில், தமிழகத்தில் இறால் பண்ணைகளில் தான் மின்சார திருட்டு அதிகளவில் நடைபெறுகிறது என்ற பத்திரிக்கை செய்தி தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். கூட்டத்தில், இறால் பண்ணைகளில் 2019 -20 முதல் 2024 வரை, 20087 எண்ணிக்கையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக பத்திரிக்கை செய்தியில் சுட்டிக்காட்டி இருப்பதை கண்டித்தும், தமிழகத்தில் 2358 இறால் பண்ணைகளே உள்ள நிலையில், 20087 திருட்டு சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக சித்தரிக்கப்பட்டு இருப்பதில், துளியும் உண்மை இல்லை. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது என்றும், மேலும் இது போன்ற திருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் இறால் பண்ணையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், அதற்கு துணை போகும் மின்சாரத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் அன்பழகன், தமிழ்ச்செல்வன், பாலசுப்பிர மணியன், தம்பியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



