சதுரங்க போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சைக்கிள் பரிசு.

X
மதுரை அரும்பனூரில் உள்ள வல்லபா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 959 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மதுரை மேலூர் ஒன்றியம், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி யாகஸ்ரீ 9 வயதிற்கு ட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவி யாகஸ்ரீக்கு ரூபாய் 12,000 மதிப்புள்ள சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. ஏற்கனவே ஜூலை மாதம் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் மாணவி S.யாகஶ்ரீ முதலிடம் பெற்று சைக்கிளை பரிசாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. மு.மணிமேகலை, இம்மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளித்தவரும், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான திரு.ஞா.செந்தில்குமார், அ.வல்லாளப்பட்டி சேர்மன் குமரன், கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
Next Story

