திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆட்சியர்

X
திருப்பத்தூர் மாவட்டம் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆட்சியர்!ஒரு திருக்குறள் சொல்லி அதற்கான விளக்கம் சொல்லுங்க பார்ப்போம் அதிகாரிகளிடம் ஆட்சியர் கேள்வி திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ல் தொடங்கப்பட்டு தமிழ்நாடு அரசு குமரிக் கடலின் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரச் சிலையை அமைத்தனர். இந்தச் சிலை 2000 ஆண்டு ஜனவரி 1-ல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில் இதற்கான ஆண்டு விழா நடத்தப் போவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது அதற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உடன் இருந்த அதிகாரியிடம் யாராவது ஒரு திருக்குறள் கூறுங்கள் மேலும் அதற்கான விளக்கங்களை கூறுங்கள் எனவும் கூறினார். அப்போது ஒரு அதிகாரி திருக்குறள் கூறி விளக்கங்களை கூறியதால் பாராட்டுகளையும் தெரிவித்தார் மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் இனிப்புகளையும் வழங்கினார்.
Next Story

